அரியலூரில் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாவட்ட அளவில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தினை உறுதிசெய்யும் சிறப்பு மருத்துவ முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
முகாமில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் பொதுசுகாதாரத்துறையும் ஒருங்கிணைந்து, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 38 குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மருத்துவ உதவித்தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து உதவித் தேவைப்படும் குழந்தைகளை தனித்தனியாக கண்டறிந்து குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நீக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இம்முகாமில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்;திட்ட அலுவலர் .க.அன்பரசி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கீதாராணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.