அரியலூரில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அனைத்து கட்சியினரும் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அரியலூரில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கொண்டாடப்பட்டது,
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொரடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் பாஸ்கர், சங்கர், ஜீவா அரங்கநாதன், பழனியாண்டி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சிவஞானம் உள்ளிட்டோர், அரியலூரில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக அரியலூர் நகர செயலாளர் இரா.முருகேசன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மணக்குடி பாலு, அருண் கலைவாணன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன், உள்ளிட்ட பலர், அரியலூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சின்னதுரை தலைமையில், நகரச் செயலாளர் விஜயகுமார், தொழிற்சங்க நிர்வாகி மணக்குடி கோவிந்தன், சக்திவேல் உள்ளிட்ட பலரும், அரியலூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், கட்சியின் நகர செயலாளர் வக்கீல் கமலக்கண்ணன் தலைமையில், கட்சி ஒன்றிய செயலாளர் பருக்கல் புகழேந்தி, ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், நகர பொருளாளர் மதியழகன், வார்டு செயலாளர்கள் அருண், ராஜேந்திரன், சின்னத்தம்பி, மணிகண்டன், ஹரிஹரன், உள்ளிட்டோர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில், அதன் அரியலூர் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில், மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் ஏ பி சுரேஷ், நகர தலைவர் மாமு சிவக்குமார் உள்ளிட்டோர், அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அதன் அரியலூர் மாவட்ட தலைவர் சிவா தலைமையில், சேகர், ஒன்றிய நிர்வாகிகள் பாலகுரு, ராமச்சந்திரன், ஜான்சன், தமிழரசன், பாலமுருகன், அபி உள்ளிட்டோர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரியலூர் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், அதன் மாநில பொதுச் செயலாளர் துரை சரவணன் தலைமையில், சங்க நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவை சார்பில், அரியலூர் மாவட்ட தலைவர் மணிவேலன் தலைமையில், செயலாளர் தமிழ்மணி, பரஞ்சோதி, உத்தாண்டம், பாஸ்கர் உள்ளிட்டோர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஏஐடியூசி சார்பில் தண்டபாணி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் துரைசாமி, சிற்றம்பலம், கிருஷ்ணன், அருணன் உள்ளிட்டோர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.