அரியலூரில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சர்வதேச பெண்கள் தின பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு, அனைத்து இந்திய ஜனநாயக மாத சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்புகள் இணைந்து, அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அருகில் இருந்து, பேருந்து நிலையம் அண்ணா சிலை வரை, சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, பேரணி நடத்தினர்.
அதை தொடர்ந்து நடைபெற்ற சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கில், தனம், துர்கா, மீனா, அகிலா, கீர்த்தனா, சகுந்தலா, மாலதி, பத்மாவதி, மலர்க்கொடி, கலைமணி, சிவசங்கரி, சுகுணா, செண்பகவல்லி, ரோஸி, பாக்கியம், ராஜேஸ்வரி, ஜோதிலட்சுமி, ஜீவா, சோபியா, ராஜாமணி, ஆதிலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிஐடியு நிர்வாகிகள் துரைசாமி, சிற்றம்பலம், சந்தானம், கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும், வாழ்த்தி பேசினர்.