அரியலூரில் அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுநர் சங்கம் சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி

அரியலூரில் அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுநர் சங்கம் சார்பில், சாலை விழிப்புணர்வு பேரணி மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை தொடங்கி, திருச்சி சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்ற, அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுநர் சங்க அரியலூர் மாவட்ட கிளை சார்பிலான, சாலை விழிப்புணர்வு பேரணிக்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் கொளஞ்சிநாதன் முன்னிலை வகித்தார்.

விழிப்புணர்வு பேரணியை தொடர்ந்து, அரியலூர் ஆயிரம் கால் மண்டப தெருவிலுள்ள, செயிண்ட் மேரிஸ் திருமண மண்டபத்தில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் அகில  மாநில தலைவர் சுரேஷ், மாநில பொருளாளர் ஜெய்சிங், துணை செய்தி தொடர்பாளர் பிங்கள நாராயணன், துணை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மாவட்ட செயலாளர் சமுத்திரம், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் எம்.ஆர்.பி விஜயகுமார், ராஜராஜன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

82 − 77 =