அரியலுார் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தை அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்  மகாலட்சுமி துவக்கி வைத்து தலைமை தாங்கினார். 2ம் அமர்வில் அமர்வு நீதிபதி கர்ணன் தலைமை தாங்கினார். 3ம் அமர்வில் குடும்ப நல நீதிபதி செல்வம் தலைமை தாங்கினார். அரியலூர் விரைவு மகளிர் நீதிமன்ற தலைவர் ஆனந்தன், அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன்,  முதன்மை சார்பு நீதிபதி,  நீதித்துறை நடுவர்கள் செந்தில்குமார், கற்பகவள்ளி  ஆகியோர் அமர்வில் பங்கேற்றனர்.

ஜெயங்கொண்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் லதா,  மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ்  மற்றும் நீதித்துறை நடுவர் எண். 1 ராஜசேகரன்  ஆகியோர் பங்கேற்றனர். செந்துறையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அக்னேஷ் கிருபா  மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் பாலு, ஆகியோர் பங்கேற்றனர். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 89 = 98