அரிமளம் அருகே பொற்கிழி விருது பெற்ற ஆதம்மை தமிழக அரசுக்கு கோரிக்கை

அரிமளம் ஒன்றியம், மேல்நிலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி ஆதம்மை.(80).  ராமையா கலைஞர் கருணாநிதியின் தீவிர  ரசிகர். அவரது கூட்டம் மாவட்டத்தில் எங்கு நடந்தாலும்,அவரது  பேச்சை கேட்க  சென்றுவிடுவாராம். கடந்த 35 ஆண்டுகளாக ராமையா திமுக தொண்டராக பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்குப்பின் ஆதம்மை  கட்சிப்பணி,தேர்தல் பணி செய்து வருகிறார்.  வறுமையில் வாடும் மூதாட்டி  ஆதம்மை  பொற்கிழி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். திமுக சார்பில்  புதுக்கோட்டையில்  தொண்டரைப்போற்றுவோம்   நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்தது.  அதில்  பங்கேற்ற இளைஞரணி செயலர் உதயநிதி,  மூத்த மற்றும் வறுமையில் வாடும்  திமுக தொண்டர்களுக்கு பொற்கிழி விருது, மற்றும் ரூ.10 ஆயிரம்  வழங்கி கௌரவித்தார். மூத்த தொண்டர் ஆதம்மைக்கும் விருது, நிதி உதவி  வழங்கினார். விருது பெற்ற மகிழ்ச்சியில் ஆதம்மை நமது நிருபரிடம் கூறியதாவது, எங்கள் குடும்பம் பாரம்பரியமாக திமுக  குடும்பம்.என் கணவர்  ராமையா, 35 வருட திமுக தொண்டர். அவரது மறைவுக்குப்பின் நான் தொடர்ந்து கட்சிப்பணிகளை செய்கிறேன். என் கணவர் ஆற்றிய பணிக்கு அங்கீகாரமாக இந்த விருதை  கருதி பெருமைப் படுகிறேன். எனக்கு முதுமையின் காரணமாக காது கேட்கவில்லை. அரசு இலவசமாக காதொலிக்கருவி  வழங்க வேண்டும்.  மேடையில் உதயநிதி  கூறியது சரியாக காதில்  விழவில்லை.  எனக்கு 2004 ல் தொடங்கி 3 ஆண்டுகள் முதியோர் பென்சன் மாதம் ரூ.1000 வந்தது. அந்த பணம் வருவது திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது.  இதுகுறித்து வருவாய் துறையினரிடம்  காரணம் கேட்டால்   சரியான பதில் கூறவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆதம்மை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =