புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு, முதலமைச்சரின் மானாவாரி நிலமேம்பாட்டு இயக்கம் என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி கலைஞரின் அனைத்துகிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தபடும் K. ராயபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் வேளாண்மை துணைஇயக்குநர் தலைமை வகித்து தேசியவேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தை விளை நிலமாக்குதல் தொழில் நுட்பங்களையும், குறிப்பாக தரிசு நிலங்களில் குறைவான நீரைக்கொண்டு சிறு தானியங்கள் பயிர் செய்வதை பற்றியும் மேலும் 2023 ஆம் ஆண்டு சார்வேதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதை பற்றியும் விளக்கிக் கூறினார். வேளாண்மை உதவி இயக்குநர் பாண்டி பிரதம மந்திரியின் விவசாய கௌரவநிதி உதவிதொகை திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவரும் மின்னணு முறையில் புதுப்பித்து கொள்ளும் முறைகள் பற்றியும், விவசாய கடன் அட்டையின் முக்கியத்துவம் மற்றும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் விளக்கி கூறினார். வேளாண்மை அலுவலர் ரெங்கசாமி வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் உழவன் செயலி பயன்பாடு மற்றும் செயல்பாடு பற்றி பேசினார்.
இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியகுமார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பாண்டியன், காளிதாசன் பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் செய்து கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ஆனஸ்ட்ராஜ் நன்றி கூறினார்.