விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருச்சி – சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சித்தணாங்கூர் அருகே கார் டயர் வெடித்து எதிரே வந்த அரசு பேருந்தின் மீது மோதிய கோர விபத்தில் ராணுவ வீரர் மற்றும் அவருடைய மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

இத்தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்விற்காகவும் மற்றும் பலத்த காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் மாவட்டம், முகையூர் புதுகாலனி பகுதியை சேர்ந்த சகாயராஜ் 46, பிரிட்டோமேரி 40, இவர்களது 2 பெண் குழந்தைகள் ஷெரின், நின்சி மற்றும் பிரிட்டோமேரி சகோதரி புனிதா ஆகிய 5 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பும்போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் சகாயராஜ் மற்றும் பிரிட்டோமேரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகபலியாயினர்.

புனிதா மற்றும் 2 பெண் குழந்தைகள் பலத்த காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், இச்சம்பவத்தால் திருச்சி – சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.