Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர்...
Homeஅறிவிப்புஅரசு பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் கிடையாது- தமிழக அரசு உத்தரவு

அரசு பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் கிடையாது- தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணமில்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். இதை தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது, பேருந்துகளில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது. கட்டணமும் வசூலிக்கப்படாது. மாவட்ட விரைவு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

x
error: Content is protected !!
%d bloggers like this: