அரசு பள்ளி மாணவிகளுக்கு பொது அறிவு வினா விடை புத்தகம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  முத்துக்குமரன்  தொகுத்து எழுதிய  பொது அறிவு  வினா விடை தொகுப்பினை  புத்தக வடிவில்,  மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வன்  தலைமையில், சிறப்பு அழைப்பாளர்களாக உளுந்தூர்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் அப்பன்டராஜ்,    பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவராஜ்,  நல்லாசிரியர் ராஜமாணிக்கம்,   பிரசன்னா  ஜெயராமன்,  பழனிஆண்டவர்  நல்லதம்பி , ராஜ்மோகன்,

பத்திரிக்கையாளர்கள் செல்லப்பெருமாள், சிவக்குமார்,  வழக்கறிஞர் முருகன் மற்றும் பள்ளியின்  உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மாணவிகளும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில்  மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள் மேலும்  மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில்  வகையில் வினாடி வினா  கேள்விகளை கேட்டு  வெற்றி பெற்ற மாணவிகளுக்கு போக்குவரத்து ஆய்வாளர் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.இறுதியில் புத்தகத்தின் ஆசிரியர் முத்துக்குமரன் நன்றி தெரிவித்தார்.