
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று 7.5% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேருவது குறைந்து வருவதால் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்கும் நிலையில், மசோதா இன்றே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.
தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை அதிமுக முழுமனதுடன் ஆதரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்தார்.