அரசு சித்த மருத்துவ நண்பர்கள் சங்கம விழா கொடைக்கானலில் 55 மருத்துவர்கள் பங்கேற்பு

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 26 ஆண்டுகளுக்கு முன் படித்த சித்த மருத்துவர்கள் கொடைக்கானலில் சந்தித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 1991-1996-ம் ஆண்டில் படித்த சித்த மருத்துவ நண்பர்கள் சங்கம சந்திப்பு நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்றது.

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 55 மருத்துவர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். விழாவின் நிரந்தர தலைமை ஒருங்கிணைப்பாளர் இம்ப்காப்ஸ், தலைவர் கண்ணன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., மருத்துவரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் மாநில தலைவர் மணி அரசன் மற்றும் பாளை, சென்னை அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சிறப்பு மருத்துவ பெருந்தகைகள் உள்ளிட்ட 55 சித்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

79 − 70 =