அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம்  தெரிவித்துள்ளார்.

சமூக பாதுகாப்புத் துறையின கீழ் இயங்கும் சேலம் அரசினர் கூர்நோக்கு இல்லம், சேலம் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம் ஆகிய மூன்று அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் (ஆண்-2 பணியிடங்கள், பெண்-1 பணியிடம்)-ஆக ஒரு குழந்தைகள் இல்லத்திற்கு 3 பணியிடங்கள் என மொத்தம் 9 பணியிடங்களை மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

 இப்பதவிக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதியான உளவியல் முதுகலைப் பட்டம் பெற்ற 25 வயது முதல் 40 வயதுக்குப்பட்ட ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு உரிய அனைத்து சான்றிதழ்களையும் 21.09.2022 முதல் 30.09.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் சேலம் மாவட்ட https://salem.nic.in/  என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்களைக் கொண்ட தேர்வுக் குழு மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும்.

மேலும், தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு சேவை வழங்கப்படும் நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவு உட்பட மதிப்பூதியம் ரூ.1000/- (ரூபாய் ஓராயிரம் மட்டும்) வீதம் வழங்கப்படும். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. தகுதியானவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்து பயனடையலாம். என்று இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 8