அரசர்குளம் விபி இல்ல விழாவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறந்தாங்கி எம்.எல்.ஏ ராமசந்திரன் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் தொழிலதிபர் சாதிக் அலியின் விபி இல்ல புது மனை புகுவிழா இன்று நடைபெற்றது.பல்வேறு அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்,டி.ராமசந்திரன்  நேரில் வாழ்த்து தெரிவித்தார்கள்.இதில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளான விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ்,

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி,  மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மேலூர் முபாரக், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணை செயலாளர்கள் செய்யது அபுதாஹிர், ஒளி முகம்மது, விவசாய அணி மாவட்ட செயலாளர்  நாகூர்கனி, கொள்கை பரப்பு மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மாணவர் அணி மாவட்ட துணைசெயலாளர் உமர் ஹத்தாப், கலாச்சார பேரவை மாவட்ட துணைசெயலாளர்கள் அப்துல் ஹமீது, நோக்கியா சாகுல், மாவட்ட அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம், ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் முகம்மது அப்துல்லாஹ், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சேக் அப்துல்லாஹ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளான நகர தலைவர் வீராசாமி, வட்டார தலைவர்கள் கூடலூர்முத்து, நிலையூர்சரவணன், முருகன், பஷிர் அலி, முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

74 − 66 =