அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு..!!

அமெரிக்காவில் நடந்த பெண்களுக்கான ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனை சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம் வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றிப்பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனைச் சேர்ந்த எம்மா ராடுகானுவும் கனடாவின் லேலா பெர்ணான்ஸும் மோதினர். இதில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு கனடாவின் லேலா பெர்ணான்ட்ஸை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரிட்டனின் 53 ஆண்டுகள் காத்திருப்பு நேற்றுடன் முடிந்தது. பிரி்ட்டனைச் சேர்ந்த ஒரு பெண் யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் 53ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக பட்டம் வென்றது இதுதான் முதல்முறையாகும்.

மேலும், அதுமட்டுமல்லாமல் கடந்த 44 ஆண்டுகளில் முதல்முறையாக பிரிட்டனைச் சேர்ந்த ஒருபெண் கிராண்ட்ஸ்லாம்பட்டம் வென்றதும் இதுதான் முதல்முறை. கடைசியாக கடந்த 1977ம் ஆண்டு விர்ஜினா வேட் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றபின் இப்போது எம்மா ராடுகானு வென்றுள்ளார். இதில், குறிப்பிட வேண்டியது என்னவென்றால் அதாவது சாம்பியன் பட்டம் வென்ற ராடுகானு தரநிலையில் 150-வது இடத்திலும், பெர்னான்டன் 73-வது இடத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

39 − = 31