அமெரிக்காவில் ரசிகருடன் தோனி வைரலாகும் வீடியோ..

அமெரிக்காவில் ரசிகருடன் தோனி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, தற்போது அமெரிக்காவில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். அவர் சமீபத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோருக்கு இடையிலான ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தை நேரில் கண்டு களித்தார்.

பின்னர், தோனி அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் கோல்ப் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அமெரிக்காவில் தனது ரசிகரை தோனி சந்திக்கும் கலகல வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தோனி அந்த ரசிகருக்கு சிறிய பேட்டில் ஆட்டோகிராப் போட்டு கொடுப்பதும், அவருடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதும், ஆட்டோகிராப் கொடுத்த பிறகு ரசிகரிடம் நகைச்சுவையாக சாக்லேட் கேட்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.