புதுக்கோட்டை மாவட்டம்ஆவுடையார் கோவில் அருகே அமரடக்கி ஊராட்சியில்கூட்டுறவு சங்கத் தலைவர் வழக்கறிஞர் கானூர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி ராமச்சந்திரன் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் முகாமில்கலந்துகொண்டுமக்களிடையே மனுக்களை பெற்றார்.

முதலில் அமரடக்கிமாரியம்மன் கோவிலில் 7 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தை திறந்து வைத்த எம் எல் ஏ அருகே அமரடக்கி கிராமம் பயன்படுத்தும் வகையில் சுமார் 23 லட்சத்தில் ஆழ்குழாய் கிணற்றையும் திறந்து வைத்து அமரடக்கியில் தனியார் திருமண மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு மக்களிடையே மனுக்களை பெற்றார். சுற்றுவட்டாரத்தில் இருக்கின்ற சுமார் 15க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் எம்எல்ஏ விடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தார்கள்.
சட்டமன்ற உறுப்பினர் மணுக்களை பெற்றுக்கொண்டு மக்களிடம் பேசும் பொழுது என்னுடைய தகப்பனார் சுமார் ஏழு எட்டு முறை இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகபணியாற்றி இருக்கிறார், 20 வருடங்களுக்கு பிறகு எனக்கு ஒரு வாய்ப்பையும் கொடுத்துள்ளீர்கள் அறந்தாங்கி தொகுதியில் இதுவரை 80க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கலந்து கொண்டு மக்கள் குறைதீர்க்கும் முகாமை நடத்தி மக்களிடம் மனுக்களைப் பெற்றுஎன்னால் முடிந்தவரை எனக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற எம்எல்ஏ வளர்ச்சி நிதியில் மக்களுக்கு தேவையானவற்றை பள்ளிக்கூடமாகவோ அங்கன்வாடி பள்ளிகளாகவோ கலையரங்கமாகவோ இயன்றவரை கட்டிக் கொடுத்து வந்து கொண்டிருக்கின்றேன் மேலும் இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு அமைச்சர்களிடமும் தேவையான நிதிகளை பெற்று இந்த தொகுதியை முதன்மை ஆக்குவேன் என்று மக்களிடம் உரையாற்றினார்.

பிறகு அமரடக்கி உயர்நிலைப் பள்ளியில் பல்லி மாணவர்களுக்கு தேவையான இருக்குகளைவழங்கி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில்ஒன்றிய பெருந்தலைவர் உமாதேவி ஒன்றிய குழு உறுப்பினர்கள்உதயம் சிவசங்கர் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே கே சி ராமநாதன், சுப்பிரமணியன்.
அமரடக்கி ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி ராஜா மற்றும் வருவாய் துறையினர், ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் வில்லியம்ஸ் மோசஸ்.
உட்பட வருவாய்த்துறை ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகள் மின்சார வாரிய அதிகாரிகள் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உட்பட500க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.