அன்னைத் தமிழுக்காக இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் – எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகிகள் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் வகையில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அன்னைத் தமிழுக்காக இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தி மொழி திணிப்பை எதிர்த்து, மாபெரும் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டு இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்பதை உலகிற்கு எடுத்துரைத்து, அன்னைத் தமிழுக்காக தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மாவீரர்களான, மொழிப்போர் தியாகிகளுக்கு எனது வீரவணக்கங்கள் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

86 − = 83