
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாக அரசு மேல்நிலைப்பள்ளி முக்கனாமலைபட்டியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டு வைத்து மாணவர்களுக்கு தமிழக கல்வி வரலாற்றில் பெருந்தலைவரின் சீரிய பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார். மொத்தம் 25 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன. பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் ஏற்பாட்டினை செய்திருந்தார். ஆசிரியர்கள் செல்வராஜ், சின்ன கருப்பையா, ஜீரோ, கலைமகள் ஆகியோர் கல்வி வளர்ச்சி நாள் குறித்து பேசினர். பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
