அன்னவாசல் ஒன்றியத்தில் கலைத்திருவிழா துவக்கம்: வட்டார கல்வி அலுவலர் அட்வைஸ்

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள் கலைத்திருவிழா என்னும் பெயரில் பள்ளி அளவில் நாளை 23ம் தேதி துவங்கி வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி அன்னவாசல் வட்டார கல்வி அலுவலகத்தில்   வட்டார அளவிலான ஆலோசனைக் குழு உறுப்பினருக்கு  கலைத்திருவிழா போட்டியினை சிறப்பாக நடத்துவது சம்பந்தமான முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் அலெக்ஸாண்டர் பேசியதாவது:

வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் இரு தகுதிகளை பெறும் தனிநபர், குழுக்கள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். இப்போட்டியானது பள்ளி அளவில் நாளை 23ம்தேதி முதல் 28ம்தேதி வரையும், வட்டார  அளவில் வருகிற 29ம்தேதி முதல் டிசம்பர் 5ம்தேதி வரை நடைபெறும். ஒவ்வொரு கட்டத்திலும் நடைபெறும் போட்டிகளை எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் சிறப்பாக நடத்தவேண்டும் என்றார்.

கூட்டத்தில், வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலா, ஷெலின் மற்றும் அன்னவாசல் வட்டார அளவிலான கலைத்திருவிழா ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

89 − 84 =