அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி

அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணிக்கு திட்ட இயக்குநர் கவிதப்பிரியா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்போம், தனிநபர் கழிப்பறையை வீடுதோறும் அமைத்து சுகாதாரம் காப்போம். ஒவ்வொருவரும் தங்களது வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இன்றி சுத்தமாக வைக்க வேண்டும். திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை தவிர்த்து அதற்காக உள்ள கழிவறைகளை பயன்படுத்த நாம் கற்பதைவிட இதை நம்வீட்டு குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமவதி, ஆனந்தன், அலுவலக மேலாளர் கணேசன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று அன்னவாசல் பேரூராட்சியில் செயல் அலுவலர் ஆசாராணி தலைமையில் உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் இளநிலை உதவியாளர் சர்மிளா உள்ளிட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − = 5