அன்னவாசல் அருகே 12 அடி மலைப்பம்பு தீயணைப்புதுறையினரிடம் ஒப்படைப்பு

அன்னவாசல் அருகே ஏதினிப்பட்டியில் கோழியை விழுங்கிக் கொண்டிருந்த 12 அடி நீள மலைப்பாம்பை பெயிண்டர் ஒருவர் தனி நபராக பிடித்து தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ஏதினிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மகேந்திரன். இவரது வீட்டில் உள்ள வைக்கோல் போர் அருகே மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கி கொண்டிருந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மனோகர் கூச்சலிட்டுள்ளார்.

இதனால் இவர் வீட்டிற்கு அருகிலுள்ள மருதப்பன் என்ற பெயிண்டர் அந்தப் பகுதிக்கு சென்று தனி நபராக 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்துள்ளார். பின்னர் இதுகுறித்து அப்பகுதியினர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினரிடம் பிடிபட்ட 12 அடி நீளம் மலைப்பாம்பு ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பாம்பு வனத்துறையினரால் நார்த்தாமலை காப்புக்காட்டில் பத்திரமாக விடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 4 = 14