அன்னவாசல் அருகே துடையூர் கிராமத்தில் விவசாயிகளுக்கான கிராம அளவிலான விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டாரம், துடையூர் கிராமத்தில் இன்று விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பாக விவசாயிகளுக்கான கிராம அளவிலான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது, துடையூர் ஊராட்சி மன்றத் தலைவர் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. இம்முகாமில் துடையூர், பனிக்கொண்டான்பட்டி, பாரைப்பட்டி, துடையூர் ஏடி காலனி,திடீர் நகர் மற்றும் தக்கிரிப்பட்டி முதலான குக்கிராமங்களிலிருந்து பல்வேறு விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

இந்த முகாமில் வேளாண் வணிகத்தறையின் திட்டங்களான வேளாண் உட்கட்டமைப்பு நிதி குறித்து அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் விற்பனை செய்திட கேட்டுக் கொள்ளப்பட்டது, தேசிய வேளாண் சந்தை பண்ணை வணிகம் பற்றி விளக்கப்பட்டது, மேலும் இம்முகாமில் அன்னவாசல் வட்டார வேளாண்மை அலுவலார் மற்றும் நார்த்தாமலை பிர்கா உதவி தோட்டக்கலை அலுவலர் கலந்து கொண்டு வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறைகளின் திட்டங்களை எடுத்துரைத்தனர். முன்னதாக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், விவசாயிகளை அவர்களது இல்லங்களுக்கே சென்று சந்தித்து திட்டம் சார்ந்த துண்டு பிரசுரங்களை வழங்கி விவசாயிகள் பயன்பெற கேட்டுக் கொண்டனர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விற்பனைக்குழு, வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை முதலான துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் இம்முகாமில் கலந்து கொண்டனர்.