அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கங்கள் சார்பில் ஆக்சிசன் செறிவூட்டிகளை மாநிலங்களவை உறுப்பினர் வழங்கினார்

ரோட்டரி மாவட்டம் 3000 புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஆக்சிசன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

வெளிநாடு வாழ் இந்தியர்களால் தொடங்கப்பட்டுள்ள ஆக்ட் கிராண்ட்ஸ் என்ற அமைப்பும் ரோட்டரி சங்கங்களும் இணைந்து இந்தியா முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்க முன்வந்துள்ளார்கள். ஆக்ட் கிரான்ஸ் மற்றும் ரோட்டரி அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. திட்டத்தின் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை கிங்டவுன் மற்றும் கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கம் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு இரண்டு 10LPM ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கணேக்ஷ்குமார் மற்றும் கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் அன்பு ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் மு.மு.அப்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆக்சிசன் செறிவூட்டிகளை அன்னவாசல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கா.சரவணனிடம் வழங்கி தந்தார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் க.நைனாமுகம்மது, முன்னாள் ரோட்டரி மாவட்ட செயலாளர் கான் அப்துல் கபார் கான், மாருதி கண.மோகனராஜா, துணை ஆளுநர் சிவாஜி, மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணி, மருத்துவர்கள் மு.சையது முகமது, செந்தில் குமார் மருத்துவ அலுவலர்கள் மற்றும் பெரு நகரச் செயலாளர் அக்பர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ரோட்டரி சங்கங்கள் மூலம் இதுவரை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 25 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 45லிஆக்சிஜன் சிலிண்டர்கள் 75 மற்றும் ஒன்பது தாலுகா தலைமை அரசு மருத்துவமனைகளுக்கு 17 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 35 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரானோ துயர்துடைக்கும் பணிகளுக்கு இதுவரை மொத்தம் 60லட்சம் மதிப்பிற்குரிய சேவைத் திட்டங்கள் ரோட்டரி மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

41 − = 32