அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பதே எங்களின் நோக்கம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு , சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும் முழு உரிமை என்னிடம் உள்ளது.அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பதே எங்களின் நோக்கம் என்று தெரிவித்தார்.