அநாகரீகமான கன்டென்ட் பரவுவதை தடுப்பதாக டிக்டாக் நிறுவனம் உறுதி; ’டிக் டாக்’ செயலி தடையை மீண்டும் விலக்கிய பாகிஸ்தான்

இன்றைய டிஜிட்டல் உலகில் பெருவாரியான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்று டிக்டாக். இந்தியாவில் இந்த செயலி தடை செய்யப்பட்டுள்ளது. இதே போலவே பாகிஸ்தான் நாட்டிலும் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. 

கடந்த 15 மாதங்களில் டிக்டாக் செயலி பயன்பாட்டுக்கு நான்கு முறை தடை விதித்துள்ளது பாகிஸ்தான். அந்த நான்கு தடையையும் பின்னர் பாகிஸ்தானில் திரும்பப் பெறப்பட்டுள்ளன. 

அநாகரீகமான கன்டென்ட் பரவுவதை தடுப்பதாக டிக்டாக் நிறுவனம் உறுதி அளித்ததன் பேரில் தடையை விலக்கிக் கொண்டுள்ளது பாகிஸ்தான். பாகிஸ்தானில் மட்டும் 39 மில்லியன் மக்கள் டிக்டாக் செயலியை டவுன்லோட் செய்துள்ளனர். சீன நிறுவனம் வடிவமைத்த இந்த செயலியை கடந்த 2020 அக்டோபரில்  முதன்முதலாக தடைவிதித்தது பாகிஸ்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல கடந்த 2008-இல் யூடியூப் தளத்திற்கு தடை விதித்திருந்தது பாகிஸ்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 15 = 16