அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை பிப்.15க்குள் திறக்க முடிவு: அமைச்சர் முத்துசாமி

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை பிப்.15க்குள் செயற்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், “அத்திக்கடவு – அவிநாசி திட்டப் பணிகள் விரைவுப்படுத்தி நடைபெற்று வருகிறது. ஜனவரி இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும்.

அதன் பிறகு 10 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெறும். சோதனை செய்து பார்ப்பது மிகவும் அவசியம். இதற்கு 10 நாள் தேவை என அதிகாரிகள் கேட்டு இருக்கிறார்கள். சிறிய, சிறிய பணிகள் மட்டுமே உள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை செயற்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். 6 பம்பிங் நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன. 99 சதவீத பணிகள் நிறைவு பெற்று விட்டன.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

85 + = 89