அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்த அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான சி.டி.ஆர். நிர்மல் குமார், பி.திலீப் கண்ணன் உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், பாஜகவில் இருந்து விலகியவர்களை அதிமுகவில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூட்டணி தர்மத்தை மீறியதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பாஜகவினர் கடந்த இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 83 = 87