அதிமுக ஏற்பாட்டில் தலைவர்கள் புகைப்படம் பள்ளி மாணவர்கள் விசிட்

புதுக்கோட்டை அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் ஏற்பாட்டில் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை நினைவு கூறும் விதமாக 75 தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது அவற்றைப் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக பார்த்து ரசித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை நெல்லுமண்டி தெருவில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் அதிமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் ஏற்பாட்டில் சுதந்திரத்திற்கு பெரும்பாடுபட்டு வெள்ளையர்களிடம் இருந்து போராடி நாட்டிற்கு விடுதலை வாங்கி கொடுத்த தேசத் தலைவர்கள் மகாத்மா காந்தி, அம்பேத்கர், மருது சகோதரர்கள், தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்ட 75 தலைவர்களின் புகைப்படங்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டதை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து தலைவர்களின் புகைப்படத்தை பார்த்து செல்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 1 =