கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் டி.எம்.தமிழ்ச்செல்வம் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவிற்கு ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் அமீது, நகர செயலாளர் பிகே சிவானந்தம், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் இளையராஜா, வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கே.சுப்பிரமணி, தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வேங்கன், எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் சக்திவேல், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் சிக்னல் ஆறுமுகம் மற்றும் அதிமுக கட்சி ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.