அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு குறித்த புகாரில் விசாரணை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 2018-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சூரப்பா, கடந்த ஏப்ரல் 11-ம் தேதி ஓய்வு பெற்றார். அவர் பணியில் இருந்தபோது அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன அது மட்டுமின்றி, சூரப்பா ரூ.248 கோடி ஊழல் செய்ததாகவும் புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில், சூரப்பாவுக்கு எதிரான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

 இந்த விசாரணைக் குழுவானது அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள், பணியாளர்களிடம் விரிவான விசாரணை நடத்தியது.

 இந்த நிலையில் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Similar Articles

Comments

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: