அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.7 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளது. ‘செல்வமகள்’ சேமிப்பு திட்டத்துக்கான வட்டியும் அதிகரித்தது.
வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி 6 தவணைகளாக மொத்தம் 2.5 சதவீதம்வரை உயர்த்தி உள்ளது. அதை பின்பற்றி, வங்கிகள், வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை உயர்த்தின.இந்தநிலையில், அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து 2-வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. அவற்றுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.