அசிக்காடு பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளிக்கு வந்த மயிலாடுதுறை ஆட்சியரை வரவேற்ற பள்ளி மாணவி

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வந்த மாவட்ட ஆட்சித்தலைவர் லலிதாவை, பள்ளி மாணவி வர்ஷினி வாழ்த்துரையுடன் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.

பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சீதாலெட்சுமி, பள்ளி அடிப்படை கட்டமைப்பிற்கு தேவையான கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். மாவட்ட ஆட்சியரோடு வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி  மன்ற உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மக்கள் பள்ளியை பார்வையிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளிக் கட்டிட நிலை, அங்கன்வாடி மையம், சத்துணவு சமைக்கும் அறை மற்றும் பள்ளி அருகில் இடிக்க வேண்டிய நிலையில் உள்ள அங்காடி கட்டிடம், பொது சுகாதாரக் கழிப்பறை கட்டிடம் போன்றவற்றை ஆய்வுசெய்தார்.

பள்ளி வளாகத்தில் அனைத்து ஆசிரியர்களுடன் சேர்ந்து மகிழம் மரக்கன்றை மாவட்ட ஆட்சியர் நட்டுவைத்தார். மாவட்ட ஆட்சியரை கௌரவிக்கும் பொருட்டு பள்ளி ஆசிரியர் லலிதா சால்வை அணிவித்தார். பள்ளி தலைமையாசிரியர் மகேஷ்  நினைவுப் பரிசு வழங்கி நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + = 22