அசாமில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி

அசாம் வெள்ளத்தில் சிக்கிபலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

அசாமில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடுமையான மழை கொட்டி வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மலைப்பாங்கான மாவட்டமான திமா கசாவோவில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் மூழ்கி பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதியிலுள்ள மக்களை ரப்பர் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணி தொடர்கிறது. இந்நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 7.11 லட்சம் மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிலும், நாகன் மாவட்டம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மட்டும் 3.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 282 தற்காலிக முகாம்களில் 74 ஆயிரம் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலுள்ள மக்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணி தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 32 = 34