அக்கச்சிப்பட்டி பள்ளிக்கு ரூ.4 லட்சத்தில் கல்வி சீர் வழங்கல் 

கந்தர்வக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில், சுவாமிநாதன் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி, காவல் உதவி ஆய்வாளர் ரித்தின்,  ஊராட்சி மன்றத் தலைவர் கங்காதரன் தலைமை வகித்தார். கல்வி சீர் வழங்கும் விழாவினை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீ தரன் தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின், பேராசிரியர் அமுதா, முன்னாள் தலைவர் வீராசாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் அச்சுதன், பள்ளி மேலாண்மை குழுத்தலைவி இலக்கியா முன்னிலை வகித்தனர்.

கந்தர்வக்கோட்டை, அக்கச்சிப்பட்டி, இந்திரா நகர், மண்டேலா நகர் ஆகிய பகுதி மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், ஊர் மக்கள் ரூ.4 லட்சம் மதிப்பிலான கல்வி சீர் பொருட்களான ஸ்மார்ட் டிவி, ஸ்மார்போர்ட், டேபிள்,சேர், இரும்பு புத்தக அலமாரி, பிளாஸ்டிக் சேர், மின்விசிறிகள், விளையாட்டு பொருட்கள், அறிவியல் உபகரணங்கள், தாம்பள தட்டு  உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்களை, 70க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் கல்வி சீராக வழங்கினர்.

முன்னதாக கல்வி சீர் பொருட்களை கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோயிலில் இருந்து அக்கசிப்பட்டி வரை மேளதாளத்துடன் எடுத்து வந்தனர். தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி வரவேற்றார். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஆனந்தராஜ் தொகுத்து வழங்கினார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

72 + = 77