அகஸ்தீஸ்வரத்தில் இருந்து 2வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி

ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பாதயாத்திரை 2-வது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார்.

ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை செல்கிறார். ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த பாதயாத்திரையின் தொடக்க விழா கன்னியாகுமரியில் நேற்று மாலை 4.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கிவைத்தார். அதை பெற்றுக்கொண்ட அவர் அங்கிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு கடற்கரை சாலையில் நடைபெற்ற பொதுக்குழுவில் பேசினார். பொதுக்கூட்டம் முடிந்ததும் கார் மூலமாக அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்துக்கு ராகுல்காந்தி சென்றார். அங்குள்ள ‘கேரவனி’ல் ஓய்வெடுத்தார். அவருடன் பாதயாத்திரை சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் தனித்தனி ‘கேரவன்’களில் தங்கினார்கள். இன்று முதல் தினமும் ராகுல்காந்தி 25 கி.மீ. தூரம் நடக்கிறார். காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பாதயாத்திரை இரண்டு ‘ஷிப்டு’களாக நடைபெறுகிறது. 11-ந் தேதியில் இருந்து ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொள்கிறார். இந்நிலையில் பாதயாத்திரையின் 2-வது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்குகிறார். இந்நிலையில், அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கும் முன் ராகுல்காந்தி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 11 =